நாம் மஹிந்தவை சந்திக்க போகும் போதும், கூட்டம் முடிந்து வரும் போதும் கண்ட விடயம்! வெளிப்படுத்தும் அரசியல்வாதி

Report Print Kamel Kamel in அரசியல்

பழைய கள்வர்கள் மீளவும் ஒன்று கூடியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நேற்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எம்மை அழைத்திருந்தார். நாம் மிகவும் சிரமப்பட்டு சனநெரிசலுக்கு மத்தியில் இல்லத்திற்குள் சென்றோம்.

நாம் போகும் போதும் கூட்டம் முடிந்து வரும் போதும் கண்ட விடயம் என்னவென்றால் மீண்டும் அந்த மோசமான திருடர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

தன்மானம் இல்லாத, கொள்கையில்லாத குழுக்களையும் நான் அவதானித்தேன். அரசியல் அனாதைகளுக்கு, அரசியல் புறம்போக்குகளுக்கு இந்த மக்கள் வெற்றியை காட்டிக் கொடுக்கக்கூடாது.

அதேபோன்று அமைச்சரவை நியமிக்கும் போது விடயஞானமுடைய தகுதியானவர்கள் அந்தந்த பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும்.

கையூட்டல் வழங்கும் வகையில் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடாது. ஜோதிடர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அரசியல் செய்யக்கூடாது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பது போன்றே அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட காரணத்தினால் வழக்கு விசாரணைகள் கைவிடப்பட முடியாது.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது. பாலில் கழுவினாலும் கரிக்கொட்டை வெள்ளை நிறமாகாது என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.