பலத்த பாதுகாப்புடன் முக்கிய இடத்திற்குள் நுழைந்த மகிந்த... நேரலை

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ச மும்மத வழிபாடுகளின் பின்னர் சற்று முன்னர் பிரதமருக்கான கடமைகளை பொறுபேற்றுள்ளார்.

முதலாம் இணைப்பு

சற்று முன்னர் பலத்த பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்ச பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில் அவர் கடமைகளை பொறுப்பேற்பதற்காக சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச பதவியை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் அங்கு சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மகிந்த அணியை சேர்ந்த அரசியல்வாதிகள் பலரும் ஏற்கனவே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.