பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச கொடுத்த ஏமாற்றம்

Report Print Nivetha in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்திருந்த போதும், புதிய பிரதமர் என மகிந்த ராஜபக்ச தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்த குழப்ப நிலை தொடர்ந்து நீடித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் இன்று காலை சர்வ மத வழிபாடுகளின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமருக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் புதிய பிரதமரான மகிந்த ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்ட போதும் அவர் கையசைத்து விட்டு கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மஹிந்த அணியால் முதல் ஊடக சந்திப்பு இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் குறித்த கூட்டத்திற்கு அவர் வருகை தராததால் பலரும் ஏமாற்றமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.