ஐ.தே.க தனியான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்! அஜித் பி பெரேரா

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பொய்யான காரணங்களை முன்வைத்து தான் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் இந்த செயற்பாடானது நாட்டை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிம்மதி சீர்குலைந்து போகும் என குறிப்பிட்டுள்ளார்.