சர்வதேசத்திடம் உண்மை அம்பலப்படுத்திய மங்கள சமரவீர!

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கையின் சட்ட ரீதியான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் முன்னாள் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம், நியமிக்கப்படும் அமைச்சரவை ஆகிய அனைத்துமே சட்ட விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் அமைப்பு ரீதியான சர்ச்சை நிலைமைகளுக்கு தீர்வு காண உடனடியாக நாடாளுமன்றை கூட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் உலகின் பல முன்னணி செய்தி சேவை நிறுவனங்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.