சீன அரசாங்கம் ரணிலுக்கு அளித்துள்ள வாக்குறுதி

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியல் நெருக்கடி நிலைமையில் தலையீடு செய்யப் போவதில்லை என சீன அரசாங்கம் தமக்கு உறுதியளித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமைகளில் தலையீடு செய்யப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் உறுதியளித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு சீனா நிதி உதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரணில் விக்ரமசிங்க பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.