த.தே.கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

Report Print Dias Dias in அரசியல்

எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஓரிரு தினங்களில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரியவருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டிலிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வரக்கூறுமாறு தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கனடா சென்றுள்ள செல்வம் அடைக்கலநாதன், வியாளேந்திரன் மற்றும் துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.