ரணிலுக்கு மற்றுமொரு அதிர்ச்சி! அலரி மாளிகையில் இருந்து விரட்டப்பட்டவர்கள் யார்?

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த சில தினங்களாக கொழும்பு அரசியல் தளம் மிகுவும் பரபரப்பானதாக செயற்பட்டு வருகிறது.

சமகாலத்தில் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் தீவிரமடைந்து வருகிறது.

பதவி விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.

இந்நிலையில் அலரி மாளிகையின் பணியாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிரடியாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவாக பதவியேற்றுக் கொண்ட போதும், தற்போதும் தானே சட்ட ரீதியான பிரதமர் என ரணில் விக்ரமசிங்க இன்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.