மஹிந்த பிரதமராக பதவி ஏற்ற பின் நடத்திய முக்கிய கூட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று கொழும்பு 7ல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

மஹிந்த ராபஜக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் நடத்தப்படும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரஜைகளையும் வன்முறைகளிலிருந்து மீட்டு எடுத்து அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மஹிந்த கோரியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை பிரதமர் மஹிந்த கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்தவும் தூண்டிவிடவும் சிலர் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு உதவியாக நிராயுதபாணிகளாக அப்பாவி பொதுமக்களை அனைவரும் பாதுகாக்க வேண்டுமேன மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.