முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் அதிரடியாக கைது

Report Print Shalini in அரசியல்

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.