நாட்டில் இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படும்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை நாடு சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற வகையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டில் இந்த நிலையை தொடரவிடக்கூடாது. இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.