முப்படைகளின் தளபதியை சந்தித்தார் புதிய பிரதமர்

Report Print Shalini in அரசியல்

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமாகிய மஹிந்த ராஜபக்ஸ இன்று முப்படைகளின் தளபதிகளை சந்தித்துள்ளார்.

முப்படைகளின் தளபதிகளை அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்ததுடன், நினைவுப்பரிசுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மற்றும் விமானப்படை தளபதி கபில ஜயம்பதி ஆகியோரை மஹிந்த சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.