ரணிலை ஏமாற்றிய வடிவேல் சுரேஷ்! மஹிந்தவிடம் அமைச்சு பதவியை பெற்றார்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மஹிந்த தரப்பினருடன் இணைந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

இதில் பெருந்தோட்டத்துறை ராஜாங்க அமைச்சர் பதவியை வடிவேல் சுரேஷ் பெற்றுள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதும் அவரை நேரில் சென்று சந்தித்த வடிவேல் சுரேஷ் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த தாவி, மஹிந்த தரப்பினருடன் இணைந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் அதனை மறுத்திருந்த வடிவேல் சுரேஷ், ஐக்கிய தேசிய கட்சியை விட்டு என்று வெளியேறப் போவதில்லை என அறிவித்திருந்தார்.

தற்போது மஹிந்த அரசில் அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.