பாரிய நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Report Print Nivetha in அரசியல்

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்தவிடம் இருந்து ரணிலிடம் வந்தார். தற்போது ரணிலிடம் இருந்து மகிந்தவிடம் போயிருக்கின்றார். உண்மையில் அவர் யாருக்குமே விசுவாசமில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ் மக்கள் விடயத்தில் அவருக்கு அக்கறையில்லை. அவரைப் பொறுத்தவரையில் இன்னும் ஒரு தடவை தான் ஐனாதிபதியாக இருக்க வேண்டுமென்பதே நோக்கமாகும்.

அதற்கமையவே அவர் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மகிந்த ராஐபக்சவோ அல்லது ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளாமல் அல்லது உத்தரவாதம் அளிக்காது விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது.

நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் இது. ஆகையினால் கூட்டமைப்பு நடு நிலைமை வகிப்பதே சிறந்தது. இதனையே என்னுடைய கட்சி செய்யும்.

அதே போன்ற நிலைப்பாட்டையே நெருக்கடியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்க வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாரிய நெருக்கடியான ஒரு காலக்கட்டத்தில் கூட்டமைப்பு உள்ளது. கூட்டமைப்பின் முடிவும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.