சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை! நாடாளுமன்றத்தை கூட்டுகின்றார்?

Report Print Murali Murali in அரசியல்

நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது நாடாளுமன்றத்தை கூடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிகளான தமது கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க உட்பட 126பேர் இதில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, நாடாளுமன்றத்தை கூட்டும் வகையில் நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.