இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை! சீனாவின் அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கையில் இடம்பெற்று வரும் மாற்றங்கள் உள்விவகார விடயங்கள் எனவும் அதில் தலையீடு செய்யத் தேவையில்லை என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஆளுமை அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை மக்களுக்கு உண்டு என சீனா கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை என்ற சீனாவின் கொள்கையே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers