இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி! ஐ.நா, அமெரிக்க அதிகாரிகள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பு

Report Print Murali Murali in அரசியல்

இலங்கைக்கான அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் ஐ.நா தூதரக உயர் அதிகாரி ஒருவரும் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க அதிகாரிகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கவலை தெரிவித்தனர் என்றும், விரைவாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சபாநாயகரின் செயலகம் இதனை தெரிவித்துள்ளது. இதனிடையே ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரியும் அதே உணர்வை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.