மைத்திரியின் கைகளுக்கு வரும் முக்கிய பதவி!

Report Print Murali Murali in அரசியல்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்னு இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து மைத்திரி - மகிந்த தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முக்கிய சில அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்படும் என விமல் வீரவங்ச கூறியுள்ளார்.