இலங்கையில் புதிய முறைக்கு அமைய தேர்தல்? மஹிந்த அறிவிப்பு

Report Print Nivetha in அரசியல்

தேவையான சட்ட ஏற்பாடு இருக்குமாயின் இரண்டு மாதங்களுக்குள் எந்த தேர்தலையும் நடத்த முடியும் என்று மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

2018ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்புக்கு அமைவாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 இலட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 650 ஆகும்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம். பழைய முறையிலும், புதிய முறைக்கு அமையவும் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமாகும்.

இதேவேளை, எடுக்கப்படவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றி உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியவும், எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.