சம்பந்தன் பிறப்பித்துள்ள உத்தரவு! கொழும்புக்கு படையெடுக்கும் கூட்டமைப்பினர்

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் தற்போது கொழும்பு வந்துகொண்டிருக்கின்றனர் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களைக் கொழும்புக்கு அழைத்துள்ளேன்" என்று இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.