ஐக்கிய தேசியத் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து வெளியான தகவல்!

Report Print Nivetha in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவருக்காகவே நாளைய போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியத் கட்சியினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை தலைவராக்க முனைபவர்களே கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் இல்லாமல் ஸ்ரீ கொத்தவுக்கும் அலரிமாளிகைக்கும் செல்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டும் இன்றி அவர் இல்லா விட்டால் அரசியலுக்கும் செல்ல போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதனை விடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக எவரும் முன்னிலையாக போவதில்லை என்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.