அரசியல் மாற்றத்தை அடுத்து மைத்திரியால் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் கருத்து

Report Print Nivetha in அரசியல்

கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட உயர் பதவி நியமனங்களில் எனது நியமனம் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்று காலை திணைக்களத்தின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்ததும் நிறுவனமே எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நான் கடந்த பல வருடகாலமாக இத்துறையில் சேவையாற்றி வருகின்றேன். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவன் என்றும் நாயகம் நாலக்க கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.