பதவியேற்ற பின் தமிழ் அமைச்சர் எடுத்துள்ள முதல் நடவடிக்கை

Report Print Shalini in அரசியல்

பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையகத்தில் அமைக்கப்பட்ட வீடுகளின் தரம் குறித்து மீளாய்வு செய்ய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தீர்மானித்துள்ளார்.

பெருந்தோட்டங்கள் பலவற்றில் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த போது குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

தற்போது அந்த அமைச்சுப் பொறுப்பை ஆறுமுகன் தொண்டமான் ஏற்றுள்ள நிலையில், குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தரத்தை மீளாய்வு செய்ய அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து மீளாய்வு செய்ய கட்டிடப் பொறியியலாளர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.