மஹிந்த ராஜபக்ச தொடர்பான செய்தியை வெளியிட்ட பிரித்தானியாவின் செய்தித்தாள்

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நிறுவப்பட்டால் கடந்தகால குற்றங்கள் யாவும் மறைக்கப்பட்டு விடும் என்று பிரித்தானியாவின் நாளாந்த செய்தித்தாளான தி காடியன் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களைக்கொண்டு அண்மையில் குறித்த செய்தியை தி காடியன் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் ரக்பி வீரர் தாஜூதீனின் கொலை தொடர்பில் விசாரணைகள் முடக்கப்படலாம் என்று அவரின் சகோதரி தி காடியனுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் ஆர்வலர்களும் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்படலாம் என்று அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனநாயகம் மனித உரிமைகள் என்பவை பாதுகாக்கப்படாது என்று சட்டத்தரணியான பவாணி பொன்சேகா காடியனுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச காடியனுக்கு வழங்கியுள்ள செவ்வியில், தமது தந்தை பழிவாங்கும் குணமில்லாதவர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மஹிந்தவின் ஆட்சியில் நாட்டின் ஸ்திரத்தன்மை பேணப்படும் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.