இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்! சர்வதேச வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் தற்போதைய அரசியல் நிலவரம் அவதானத்துக்குரியது என்று சர்வதேச வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் மாற்றம் அடுத்து வரும் நாட்களில், பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே தற்போதைய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்காணப்படவேண்டும் என சர்வதேச வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசியல் அதிகாரத்துவம் கொண்டவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் சர்வதேச வர்த்தக சம்மேளனம் கோரியுள்ளது.

பாரிஸில் அமைந்துள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம், பாரிய வர்த்தக நிறுவகமாகும். இதில் சுமார் 100 நாடுகளை சேர்ந்த 60 லட்சம் பேர் வரை பிரதிநிதிகளாக உள்ளனர்