இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா!

Report Print Murali Murali in அரசியல்

இலங்கை, சீனாவுடனான உடன்பாட்டின் மூலம் தனது சொந்த துறைமுகத்தில் இறைமையை இழந்து விட்டதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் James Mattis இதனை தெரிவித்துள்ளார். அமைதிக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக, சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டை சுட்டிக்காட்டியே அவர் உரையாற்றியுள்ளார்.

“சீனாவின் கடனைப் பயன்படுத்திய சில நாடுகள், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளன. இலங்கை விடயத்திலும் அவ்வாறே. அவர்கள் தமது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டனர்.

இது போன்ற பிரச்சினைகள் குறித்தும் வாசிங்டனில் விரைவில், சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடத்தவுள்ள சந்திப்பின் போது வெளிப்படையாகப் பேசுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.