இதுதான் எனது முடிவு: சாள்ஸ் நிர்மலநாதன்

Report Print Ashik in அரசியல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முற்று முழுதாக மறுத்துள்ளார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள குறித்த நபர் மஹிந்த அணியுடன் இணைந்து அமைச்சு பொறுப்பை கைப்பற்றிக்கொள்ள தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சியை சேர்ந்த மன்னார் எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும்,கபினெட் அமைச்சு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராஜாங்க அமைச்சு பதவியே வழங்க முடியும் எனவும்,கெபினட் அமைச்சு பிரிதொரு நபருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகிந்த அணி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலின் உண்மை விபரம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் தற்போதுள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுக்கும் முடிவே எனது முடிவு. குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என அவர் தெரிவித்தார்.


You may like this video