என்னை கொலை செய்தாலும் சமஷ்டி கிடையாது! அதிரடி காட்டும் மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

“வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை. அதேபோல் சமஷ்டியும் இல்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவற்றை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் முதலில் என்னை கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்து நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளார்.