மகிந்தவின் பிரதமர் பதவியால் அமெரிக்கா விடுத்த முக்கிய செய்தி!

Report Print Nivetha in அரசியல்

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து சகலவற்றையும் தீர்மானிக்க வேண்டுமே தவிர எவரையும் அச்சுறுத்தியல்ல என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி ஊடகப் பேச்சாளரான ரொபர்ட் பெல்லடினோ அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் ஆட்சியாளரை சம்பிரதாயப்பூர்வமாகவும், சட்ட வரைவுக்கு அமைவாகவுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதியை உடனடியாக சபாநாயகருடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டும் என்றும் ரொபர்ட் பெல்லடினோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த 26ஆம் திகதி இரவு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியான மகிந்தவை பிரதமராக அறிவித்திருந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பல்வேறு சர்வதேச நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.