தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைவு கடும்போக்கு அரசியல்வாதிகளுக்கு கசப்பானது

Report Print Nivetha in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலகுவாக ஆட்சியமைக்கும் பலம் காணப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நெகிழ்வுத் தன்மை கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு மீண்டும் ஒன்று படுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகளுக்கு> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைவு கசப்பானதாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி தனது குறைபாடுகளை சரிசெய்து முன்னோக்கிச் செல்ல தயாராகவுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.