துமிந்தவுக்கும், பசிலுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு கட்சிகளுக்கும் இடையில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து நீண்ட நேரம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் அதிருப்தியுடன் காணப்படுவதாக துமிந்த திஸாநாயக்க பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.