தமிழ் அமைச்சர்களின் செயல் வேடிக்கையாக இருக்கிறது!

Report Print Nivetha in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளதால் தான் ஒருபோதும் கட்சிக்கு துரோகமிழைக்க மாட்டேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால் அது தமிழ் இனத்தினை அவமதிப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முறையற்ற விதத்தில் உருவாகிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் மலையக மக்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பார்களாயின் அது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணிலின் பதவி நீக்கம் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு இழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல் நாள் தன் இனப் பெருமை தொடர்பில் கருத்துக்களை பறைசாற்றியவர்கள் அடுத்த நாள் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டமையானது வேடிக்கையாக உள்ளது.

Latest Offers