அரசியல் நெருக்கடி குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

Report Print Mubarak in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு அளிப்பதால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கும் அனுகூலங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் அதேபோன்று எதிர்கால அரசியலை எப்படி முன்கொண்டு செல்வது மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் முறைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.