மஹிந்த தொடர்பில் சபாநாயகரிடம் மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்
1328Shares

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாகயர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் தான் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான சபாநாயகரின் கோரிக்கைக்கு பின்னர் ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதியும் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.