ரணில் விக்ரமசிங்க புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குச் சமமானவர்! பௌத்த தேரர் ஆதங்கம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர், அவர் பிரபாகரனுக்குச் சமமானவர் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் பிரபாகரனுக்கு ஆதரவளித்தது போல், உள்நாட்டு மக்கள் மற்றும் உள்நாடடு ஊடகங்களைவிட சர்வதேச சமூகம், சர்வதேச ஊடகங்கள் அவருக்கு ஆதரவு வெளியிடுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்னறு செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் மூன்று ஆண்டுகள் பொறுத்திருந்த ஜனாதிபதி தற்போது பிரதமரை மாற்றும் முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாமும் ஜனாதிபதியை பலமுறை அவதூறாகப் பேசியிருக்கின்றோம். ஆனால் இவ்வாறானதொரு சிறந்த முடிவினை மேற்கொள்ளத்தக்க ஆத்ம தைரியம் அவரிடம் உண்டு என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த காலத்தில் நாட்டை சிறப்பாக நிர்வகித்த மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதுள்ள நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers