குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் சர்ச்சைக்குரிய பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரத் திட்டமிட்டுள்ளார்.
தங்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் பொய் தகவல்களை வழங்க இந்த அதிகாரி முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் பிரதிவாதி ஒருவரை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பில் இந்த அதிகாரிக்கு தொடர்பு உண்டு என பொலிஸ் வட்டாரத்தில் பேசப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு விசாரணை அதிகாரியொருவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று குடியேறுவதற்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.