வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க ஐ.தே.க விரும்பினால் அதற்கு ஆதரவளிக்கப்படும்: மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று பொதுத் தேர்தலுக்கு செல்வேதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்வது அவசியமானது எனவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதே இதற்கான சுலபமான வழிமுறை எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதும், என்னை தோற்கடிப்பதும் தேர்தல் ஒன்றுக்கு செல்வதாகும், அதனை நான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers