எனக்கு எதுவும் தெரியாது! வடக்கிலிருந்து செல்லவும் தயார்: ஆளுநர் அறிவிப்பு

Report Print Shalini in அரசியல்

வடமாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் தான் இங்கிருந்து செல்ல தயாராக இருப்பதாகவும் வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ். சுண்டிக்குழியில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது ஆளுநர் மாற்றம் தொடர்பில் ரெஜினோல்ட் குரேயிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது, மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் நான் இங்கிருந்து செல்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் தீபாவளி வாழ்த்துக்களை மாத்திரம் சொல்ல உள்ளதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வேறு விடயங்கள் தொடர்பில் பேசவோ அல்லது கேள்விகள் எழுப்பப்படுவதையோ தவிர்த்துக் கொண்டு உடனடியாக அந்த சந்திப்பை முடித்துக் கொண்டு ரெஜிநோல்ட் குரே சென்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என். வித்தியாதரன் நியமிக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers