மங்கள சமரவீரவுக்கு ஆபத்து! மஹிந்தவிடம் சிக்கிய ஐ.நா விவகாரம்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இதன்போது தேசிய முக்கியத்துவம் பெற்ற ஐந்து யோசனைகளை விரிவுரையாளர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.

அதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் நினைத்தபடி இணை அனுசரணை வழங்கிய 30/1 எனும் ஆலோசனை மற்றும் அதற்கு அடிப்படையாக இருந்த OISL ஆணையாளர் அறிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த மத்திய வங்கி மோசடி தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் அதேவேளை அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பிரதேச வேறுபாடின்றி தொல்பொருள்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நேரடியாக முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் முறையை நிறுத்தி அதனை கண்காணிக்கும் வகையில் அரசாங்கம் விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் என்ற கோரிக்கைகளும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers