ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு புதிய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சர் பதவியையோ வேறு அமைச்சு பதவிகளையோ வழங்குவதை தாம் எதிர்ப்பதாக தேசிய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் சந்தன ஜயசுமண வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு மக்களின் பெரும்பாளானவர்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள ராஜித சேனாரத்ன போன்றவர்களை எந்த வகையிலும் தற்போதைய அமைச்சரவைக்குள் இணைத்து கொள்ளக் கூடாது எனவும் ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers