எவரும் எண்ணிப்பார்க்காதவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

எவரும் எண்ணிப்பார்க்காதவர்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நபர்கள் யார் என்பதை இன்றும், நாளையும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு, டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவை புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள 30 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் தான் பணத்திற்காக கொள்கையை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்ல போவதில்லை என தான் இரத்தத்தில் எழுதி உறுதி வழங்கியிருப்பதாகவும் புத்திக பத்தரண குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சராக பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவுக்கு 20 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers