பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று தமது அமைச்சுக்கு சென்று கடமைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நல்லாட்சியால் அமைக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் சம்பிக்க ரணவக்க இன்று தாம் அமைச்சராக பதவி வகித்த இடத்திற்கு சென்றுள்ளார்.
சுஹூருபாயவில் 18வது மாடியில் உள்ள அமைச்சுக்கு சென்று கடமைகளில் ஈடுபட்டதாக தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
மேலும் புதிய அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டாலும், பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு என்னுடையதே என குறிப்பிட்டுள்ளார்.