நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ள அரசியலமைப்பு சதித்திட்டம் காரணமாக இலகு ரக தொடருந்து சேவை ஏற்படுத்த கிடைக்கவிருந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு இன்று காலை சென்று அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலகு ரக தொடருந்து (மோனோ ரயில்) திட்டத்திற்கு ஜப்பான் 1.4 பில்லியன் நிதியுதவியை வழங்க முன்வந்திருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு ஜப்பான், அந்த நிதியுதவியை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச வங்கிகள் அடுத்த கட்ட தொகைகளை வழங்காது நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பேராசிரியர் கலாநிதி தம்பர அமில தேரர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Latest Offers