மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை ஒன்று இன்று மாலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அந்த பதவிக்கு அரசியலமைப்பு ரீதியான வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை எனவும் இவ்வாறான நிலைமையில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers