ஜே.வி.பி ரணிலை ஆதரிக்காது!

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரையும் ஆதரிக்காது என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரை நீக்குவதோ அல்லது நியமிப்பதோ அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நடந்துள்ள அரசியலமைப்பு விரோத நடவடிக்கைக்கு எதிராக செயற்படுவது என கட்சி என்ற அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். ஜனாதிபதி இதனையும் மீறியுள்ளார். ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கும்.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி, ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Latest Offers