நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்

Report Print Steephen Steephen in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் இருப்பதாகவும், உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை கண்டிக்கின்றோம், கவலைப்படுகிறோம். எமக்கு தேவையான பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

சபாநாயகர் எமது கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என கோருகிறோம். நாங்கள் முன்பு இருந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதனை செய்யுமாறே நாம் கோருகிறோம்.

ஜனாதிபதி பதவி விலகினால், நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வோம். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பதற்றம் இருக்கின்றது என்பதும் தெரியும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers