நான்கு மாதங்களுக்கு முன்னரே டீல் பேசிய மகிந்த - மைத்திரி! நாமல் வெளியிட்ட தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கும் முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நான்கு மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி ஊடகவியலாளர் ஸ்ரீனிவாசன் ஜெயின், நாமல் ராஜபக்சவை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த கூட்டணி தொடர்பான தனது தந்தையும், இலங்கை ஜனாதிபதியும் நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்தே பேச்சுவார்த்தை நடத்தியதாக நாமல் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக ஸ்ரீனிவாசன் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers