மஹிந்த அரசியலமைப்பிற்கு அமைவாகவே பிரதமராக்கப்பட்டார்: ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பிற்கு அமைவாகவே பிரதமராக்கப்பட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸிற்கு இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகத்துடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Latest Offers