மகிந்த பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: சுதந்திரக்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததாக தான் இந்தியா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்து தெளிவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை கூறியுள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் எந்த பிரச்சினைகளும் இன்றி தீர்க்கப்படும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமையில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers