ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கு வழங்கி வரும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

வரிச் சலுகையை பெற்றுக்கொளள் இலங்கை இணங்கிய விடயங்களை நிறைவேற்றாது போனால், வரிச்சலுகையை நிறுத்துவது தொடர்பான ஆராயப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் துன்க் லாய் மாகி வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருகிறது.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை நியமித்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

Latest Offers